உள்ளூர் செய்திகள்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-07-30 10:55 GMT   |   Update On 2022-07-30 10:55 GMT
  • வளாக சுற்றுச்சூழல் தனிக்கை பயிற்சிகள் போன்றவற்றை இணைந்து மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
  • அந்தந்த கல்வி நிறுனங்களின் துறைத்தலைவர்களும், ஆசிரியர்களும் உடன் இருந்து உதவி புரிந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் சுற்றுச்சூழல் அறிவியல் தொடர்பான கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள், மாணவர்களுக்கான பணிப்பயிற்சி திட்டங்கள் மற்றும் வளாக சுற்றுச்சூழல் தனிக்கை பயிற்சிகள் போன்றவற்றை இணைந்து மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்ப்ந்தம் செய்து கொண்டன.

தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் முன்னிலையில் பதிவாளர் முனைவர் தியாகராஜன், பிஷப் ஹீபர் கல்லுரியின் முதல்வர் முனைவர் பால் தயாபரன் ஆகியோர் 5 ஆண்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்நிகழ்வில் அந்தந்தக் கல்வி நிறுனங்களின் துறைத்தலைவர்களும், ஆசிரியர்களும் உடன் இருந்து உதவி புரிந்தனர்.

Tags:    

Similar News