உள்ளூர் செய்திகள்

பாலப்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்களை அச்சுறுத்திய மலைத்தேனீக்கள்

Published On 2022-10-28 09:48 GMT   |   Update On 2022-10-28 09:48 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாலப்பட்டி மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது.
  • பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாலப்பட்டி மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளை இந்த மலைத்தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்து வந்தனர். மாணவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் தேனீக்கள் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதியினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு விரைந்து, வேப்பமரத்தில் கூடு கட்டி இருந்த மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News