உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையம்-உதகை இடையே நாளை முதல் மீண்டும் மலைரெயில் சேவை
- ரெயில் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு.
- பாறை, மண்குவியலை அகற்றும் பணியால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை ரெயில் பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், தண்டவாளத்தில் ராட்சத பாறைகளும் விழுந்தன. ரெயில் பாதையில் விழுந்துள்ள பாறை, மண்குவியலை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதனால் மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த பணிகள் நிறைவு பெற்று ரெயில் பாதை சரியானதால், மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.