மேலசங்கரன்குழியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அமுதத் தோட்டம் எனும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது.
- நேரு யுவகேந்திரம் மற்றும் அஞ்சல் துறை சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்
ராஜாக்கமங்கலம் :
இந்தியா முழுவதும் என் மண் என் தேசம் எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து மண் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியமாக அது டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அமுதத் தோட்டம் எனும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரம் மற்றும் அஞ்சல் துறை சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா இளையோர் நல அலுவலர் ஞானசந்திரன் அஞ்சல் துறை அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன், ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பொன் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.