உள்ளூர் செய்திகள் (District)

முதுமலை பொம்மதேவர் கோவில் திருவிழா

Published On 2023-04-04 09:00 GMT   |   Update On 2023-04-04 09:00 GMT
  • விடிய விடிய விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
  • சுவாமிக்கு வாழைக்குலைகள் படையல் செய்யப்பட்டது.

நீலகிரி

முதுமலை பெண்ணையில் பொம்மதேவர் கோவில் திருவிழாவில் கிராம மக்கள் பாரம்பரிய நடனமாடினர். பொம்மதேவர் கோவில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெண்ணை பகுதியில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன்செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வ கோவிலான பொம்ம தேவர் கோவில் வனப்பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொம்ம தேவருக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல குடும்பங்கள் சன்னக்கொல்லி பகுதியில் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பொம்மதேவர் கோவில் திருவிழா பெண்ணை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விடிய விடிய விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 2-வது நாள் காலை 10 மணிக்கு அருள்வாக்கும், தொடர்ந்து தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சுவாமிக்கு வாழைக்குலைகள் படையல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News