உள்ளூர் செய்திகள்
மூவலூர் மார்க்கசகாயசாமி கோவில் தேரோட்டம்
- கோவிலிருந்து மார்க்கசகாயசாமி சவுந்தரநாயகி அம்பாளுடன் தேரில் புறப்பட்டது.
- பக்தர்கள் வழிநெடுகிலும் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9-ம் திருநாளின் முக்கிய விழா வான தேரோட்டம் நேற்று கோயில் நிர்வாக செயல் அலுவலர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
கோவிலிருந்து மார்க்கசகாய சுவாமி சௌந்தரநாயகி அம்பாளுடன் தேரில் புறப்பட்டது.
பின்னர் நான்கு வீதிகளில் வீதி உலா வந்தது.
இந்த தேர் திருவிழாவில் தக்கார் சதிஷ், உபயதாரர்கள், கிராமவாசிகள், அனைத்து வழிப்பாட்டு மன்றத்தினர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.