'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு பேரணி
- பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள்பை எடுத்துச் செல்வோம்.
- மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து தூய்மை பணியாளரிடம் கொடுக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சயின் சார்பில்ராஜாஜி பூங்காவில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எற்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார் நகராட்சி ஓவர்சியர் குமரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில்நகராட்சி துணைத் தலைவர் மங்களநாயகி, நகர மன்ற உறுப்பினர்கள் உமா, மயில்வாகனன், செல்வம், பொறியாளர் முகமது இப்ராஹிம், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள்கலந்து கொண்டனர்
பின்பு என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணி புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி வழியாக நகராட்சி சென்றடைந்தது. பேரணியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள் பை எடுத்து செல்லவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி கடைகள், வீடுகளுக்கும் பாதசாரிகளுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
நகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பச்சை நிற கூடைகளில் மக்கும் குப்பை களையும் நீல நிறக் கூடைகளில் உலர் கழிவுகளையும் மக்காத குப்பைகளை சிவப்பு நிற கூடைகளிலும் கொட்ட வேண்டும்.
மேலும் வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து தினசரி குப்பை எடுக்க வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் குப்பைகளை ரோட்டில் கொட்டி வைக்க கூடாது தூய்மையான நகரமாக திகழ பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டு கொண்டார்.