உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது. 

மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு

Published On 2022-06-19 09:05 GMT   |   Update On 2022-06-19 09:05 GMT
  • மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா: மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது.
  • விழாவில் சிவக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்:

மயிலம், தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் 84-ம் ஆண்டு கல்லூரி நிறுவியோர், மற்றும் விளையாட்டு விழா நடந்தது இதில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார் கல்லூரி செயலாளர் ராஜுவ் குமார் ராஜேந்திரன், முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழாவில் சிவக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர்கள் கலந்து கொண்டு, வாலிபால், கபடி, கோகோ, ஓட்டப்பந்தயம், கவிதை, கட்டுரை, பாட்டு, கோலப் போட்டி, ஓவியப், போட்டி, நடனப்போட்டி, ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள், மற்றும் கல்லூரியில் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதில் சென்னை மத்திய நிறுவன செம்மொழி தமிழாய்வு முன்னாள் பதிவாளர் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய உறுப்பினருமான பேராசிரியர் முத்துவேல் மற்றும் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் லட்சாராமன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள், நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் வீரமுத்து அனுராதா, ஜீவா, வேதாசலம், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் முடிவில் துறை தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News