உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ரூ.17¾ லட்சத்துடன் மாயமான மேலாளர்

Published On 2023-02-07 09:17 GMT   |   Update On 2023-02-07 09:17 GMT
  • மேலாளராக வேலை செய்து வந்தார்.
  • இதையடுத்து போலீசார் ராஜேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குனியமுத்தூர்,

ஈரோடு சஞ்சை நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 49). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வைத்துன்னார்.

இவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மோட்டார் சைக்கிள் ஷோரூமில் குனியமுத்தூரை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் மேலாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வாடிக்கையாளர்கள் அளிக்க வேண்டிய ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்து 700 பணத்தை, அவரது வங்கி கணக்கிற்கு ரூ.7 லட்சத்து 61 ஆயிரமாகவும், ரொக்கமாக ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 700-யையும் பெற்று கொண்டார்.

அதன் பின்னர் அந்த பணத்தை ராஜேஷ் குமார் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென வேலைக்கு வர வில்லை. பணத்துடன் மாயமாகி விட்டார். எனவே பணத்தை எடுத்து மோசடி செய்த ராஜேஷ் குமார் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News