உள்ளூர் செய்திகள்

கண்காணிப்பு காமிராவில் மர்மநபர்கள் வந்தது பதிவாகி உள்ள காட்சி

திட்டக்குடி , ராமநத்தம் பகுதிகளில் நூதனமுறையில் திருடும் மர்ம நபர்கள்

Published On 2023-01-09 08:13 GMT   |   Update On 2023-01-09 08:13 GMT
  • பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறி விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார்.
  • மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர்

கடலூர்:

 திட்டக்குடி அருகே வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதமொழி (29) தற்பொழுது தனது தாய் வீடான டி.ஏந்தல் வீட்டில் உள்ளார். நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பித்தளைக்கு பாலிஷ் போடுவதாக கூறியதன் பேரில், அமுதமொழி வீட்டில் இருந்த விளக்கை கொண்டு வந்து கொடுத்து பாலிஷ் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி பாலிஷ் போடும்போது, பளிச்சென்று தெரியவே, அமுதமொழி தன்னுடைய கழுத்தில் இருந்த தாலி செயின் மற்றும் ஒரு கிராம் மோதிரம் மொத்தம் 8 பவுன் நகையை கழற்றி பாலிஷ் போட்டு தரும்படி கொடுத்தார்.

அப்போது மர்ம நபர்கள் அதிக நகை இருப்பதால் வெந்நீர் இருந்தால் தான் பாலிஷ் போட முடியும் என தெரிவித்தவுடன் அமுதமொழி வெண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்மநபர்கள் அவர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ள னர் வெளியே வந்து பார்த்த அமுதமொழி மர்ம நபர்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த பொழுது நடந்தவற்றை அமுதமொழி கூறி அழுதுள்ளார். உடனடியாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமுதமொழி வீட்டிற்கு வருவதற்கு முன் அந்தப் பகுதியல் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் வீட்டில் இருந்த பெண்ணிடம் பாலிஷ் போடலாமா என கேட்கும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்ததால் அந்த காட்சிகளை கொண்டு ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் டிப்டாப் ஆசாமிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News