நாகை மாவட்டத்தை மீன்வள ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும்-பா.ம.க. தலைவர் அன்புமணி பேட்டி
- தமிழ்நாடு தொழிற்சாலை 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.
- ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று நாகை மாவட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மீன்வள ஏற்றுமதி மண்டலம்
நாகப்பட்டினம் மாவ ட்டத்தை மீன்வள ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ெரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,
தமிழ்நாடு தொழிற்சாலை 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.
ரெயில் மறியல்
நீட் தேர்வு, மின் கட்டண கணக்கீடு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. மற்ற மாநிலங்களைப் போல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நாகை திருவாரூரில் நாளை நடைபெற உள்ள ெரயில் மறியல் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் கலந்து கொள்ளும்.
ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்த அன்புமணி, தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம்.
ராகுல்காந்தியின் நடைபய ணம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், இந்திய அரசியலில் ராகுல் காந்தி நடைபயணம் பெரிய எதிரொலியை ஏற்படுத்தி பாஜகவிற்கு பின்னடைவை உண்டாக்கும் என்று தனது கருத்தை தெரிவித்தார்.