கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
- கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கொல்லிமலை:
கொல்லிமலை ஆகாய நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் வளப்பூர் நாடு பஞ்சாயத்து பகுதியில் ஆகாய நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
இது கடல் மட்டத்திலிருந்து 1350 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும்.
தற்போது கொல்லிமலை பகுதியில் தொடர்ந்து 5 நாட்களாக மழை பெய்து வருவதால் கொல்லிமலை பகுதியில் உள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.