கைலாசநாதர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
- திருச்செங்கோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சாரதா சமதி இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டு 18 மகா திருவிழாக்கு பூஜை கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடந்தது.
- 1008 பெண்கள் கலந்து கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை செய்து வணங்கினார்கள் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மீக உரையாற்றினார்.
திருச்செங்கோடு:
உலக நன்மைக்காகவும் வன்முறை ஒழியவும் சகோதரத்துவம் நிலவும் சகிப்புத்தன்மை ஓங்கவும் சர்வ மத நல்லிணக்கம் ஏற்படவும் மழை வேண்டியும் நவகிரக தோஷ நிவர்த்திக்காகவும் திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டமும் திருச்செங்கோடு திருவிளக்கு பூஜை விழா கமிட்டியும் திருச்செங்கோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சாரதா சமதி இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டு 18 மகா திருவிழாக்கு பூஜை கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடந்தது. இதில் 1008 பெண்கள் கலந்து கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை செய்து வணங்கினார்கள் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மீக உரையாற்றினார்.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அருணா சங்கர், அர்ஜுனன், தியாகராஜன், விசாகவேல், பரமசிவம் சாமி, லட்சுமண சாமி, மயில் முருகேசாமி, நீலமேகம், ஆசிரியர் மணி, ராஜேஷ்வரன், மீனாட்சி ரவிச்சந்திரன், ரேணுகா லட்சுமண சாமி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.