உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து 19 பேர் படுகாயம்
- தனியார் கல்லூரியில் டிரைவராக சங்ககிரி அருகே மரவம்பா ளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64) என்பவர் பணியாற்றி வருகிறார்.
- நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி பஸ் கவிழ்ந்தது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பல்லக்கா பாளையம் அருகே மங்கரங்கம்பாளையம் தனியார் கல்லூரியில் டிரைவராக சங்ககிரி அருகே மரவம்பா ளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி யில் பணி யாற்றும் 19 பணி யாளர்களுடன் பேருந்தில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைந்தனர்.
இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.