நாமக்கல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 541 மனுக்கள் பெறப்பட்டன
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
- கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்கள் வரப்பெற்றன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 4 பேருக்கு 7,800 ரூபாய் மதிப்பில் நடைபயிற்சி சாதனம், ஒருவருக்கு 2,500 ரூபாய் மதிப்பில் ஊன்று கோல் என மொத்தம் 5 பேருக்கு 10 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அவற்றை, கலெக்டர் உமா, பள்ளி மாணவ, மாணவியர் பார்வை யிட்டனர். தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில் தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலாகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.