ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு
- ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா, போக்குவரத்து செயலாக்கம் அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் மற்றும் பம்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்தியா, போக்குவரத்து செயலாக்கம் அலுவலர் சரவணன் மற்றும் அலுவலர்கள் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தடையை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் மற்றும் பம்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களை வாடகைக்கு பயன்படுத்தியதாக 4 கார்களை பிடித்து விசாரணை நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் 2 கார்களுக்கு அபராதம் விதித்தனர். கண்ணை கூசும் ஒளிபட்டைகள் பொருத்தியது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.83 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.