உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் தபால் நிலையத்தில்12 மணி நேர சேவை தொடக்கம்

Published On 2023-08-01 09:12 GMT   |   Update On 2023-08-01 09:12 GMT
  • ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது.
  • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது.

ராசிபுரம்:

சேலம் மேற்கு தபால் கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக கூடுதலாக ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. 3 ஷிப்ட் ஆக பிரித்து ஊழியர்களை பணி அமர்த்தி இரவு 8 மணி வரை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்பகல் 2.30- க்கு பிறகும் தபால் நிலையத்திற்கு மக்கள் வந்து சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தலாம்.இனிமேல் ராசிபுரம் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பரிவர்த்தனைகள், விரைவு தபால் பார்சல் சேவை அயல்நாட்டு தபால் சேவை, மணியாடர் சேவை ஆகிய அனைத்தும் இரவு 8 மணி வரை வழங்கப்படும்.இந்த தகவலை சப் - போஸ்ட்மாஸ்டர் ஹெலன் செல்வராணி, உட்கோட்ட ஆய்வாளர் சரவணன், உதவி சப்-போஸ்ட் மாஸ்டர் நிர்மலா, பி.எல்.ஐ. வளர்ச்சி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News