- அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
- பேரணியை தலைமை யாசிரியர் ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பாரத சாரண சாரணீயர் இயக்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணியை தலைமை யாசிரியர் ராஜமாணிக்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கபிலர் மலை வட்டார வளமைய பயிற்றுநர் வினோதா, சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பு ஆசிரியைகள் ஜீவா, மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கி இந்தியன் வங்கி, மின்சார வாரிய சேமிப்புக் கிடங்கு, சரளைமேடு, அரசுப் பொது மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணியில் சுற்று சூழல் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக சுற்றுச்சூழல் மன்ற மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத் தூய்மை. தேவையற்ற மரக் கிளைகளை வெட்டி அகற்றுதல், கட்டிட மேல் தளங்களில் உள்ள ஈரக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் தேங்கும் இடங்களை அறிந்து சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஆசிரியர் வழிகாட்டுதலில் பேரில் பாதுகாப்பான முறையில் மேற்கொண்டனர். முடிவில் சாரண ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.