உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை வட்டாரத்தில் மானிய விலையில் பழச்செடிகள் வழங்கல்

Published On 2023-06-20 07:01 GMT   |   Update On 2023-06-20 07:01 GMT
  • கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தலுக்காக 75 சதவிகித மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
  • விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவிகித மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கோப்பணம்பாளையம், திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம் மற்றும் பெருங்குறிச்சி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுபடியை ஊக்குவித்தலுக்காக 75 சதவிகித மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் மா,பலா, கொய்யா,எலுமிச்சை, நெல்லி,சீத்தா போன்ற 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவிகித மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி செய்ய பழச்செடிகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல் மற்றும் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறையினை அணுகி பயன்பெறலாம் என்று கபிலர்மலை தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News