உள்ளூர் செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நாளை தொடக்கம்

Published On 2023-10-26 10:56 GMT   |   Update On 2023-10-26 10:56 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
  • நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் குறித்த சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

தவிர நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News