வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
- பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
- வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், குப்புச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம் வெங்கரை, பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லிக் கோவில், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
வாழைத்தார்
வாழைத்தார் விளைந்த வுடன் கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.
வாங்கிய வாழைத்தார் களை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப் பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் ஏலம் போனது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.700-க்கு விற்பனையானது.