உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மார்க்கெட்டில் பூ விலை உயர்வு
- பூ சாகுபடி செய்யப்பட்டு நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
- கடந்த 10 நாட்களாகவே பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட சுற்றுப்புறத்தில் இருந்து பூ சாகுபடி செய்யப்பட்டு நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். மேய்க்கல்நாயக்கன்பட்டி, ஏழூர் பட்டி, பொடிரெட்டிபட்டி, தம்மம்பட்டி, நாமகிரிபேட்டை, முள்ளுக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும். உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. மல்லிகை பூ சேலம், ஈரோடு, கரூர், திருச்செங்கோடு, மற்றும் திண்டுக்கல்லில் இருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கிசெல்கொன்றன. கடந்த 10 நாட்களாகவே பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. பூக்கள் விலை விபரம் மல்லிகைப்பூ ரூ.480, முல்லை ரூ.80, சாமந்தி ரூ.400, சம்மங்கி ரூ.100, கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ 20-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.