ஆதிதிராவிடர் மாணவர்களுக்குஇலவச தொழிற்நுட்ப பயிற்சி
- (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
- சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கும் தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலமாக திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண்களுக்கும் தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 12 நாட்கள் ஆகும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சிகட்டணம் தாட்கோ வழங்கும். விருப்ப முள்ளவர்கள் இதில் விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.