பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
- இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின்னர் 5-ம் நாள் விநாயகர் சிலை கள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம்.
அதேபோல் இந்த வருட மும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 118 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. 5-ம் நாளான நேற்று மாலை வேலூரில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் கடைவீதி, காத்தாக்கண்டர் பிரிவு சாலையில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி ஒற்றுமை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு பரமத்தி ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய கேசவன் முன்னிலை வகித்தார். பரமத்தி ஒன்றிய ரமேஷ் வரவேற்றார். இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் எழுச்சியுரையாற்றினார். மாவட்ட பொதுச்செய லாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
அதனை தொடர்ந்து பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் கொடியசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கடைவீதி பகுதியில் இருந்து தொடங்கிய விநா யகர் விசர்ஜன ஊர்வலம் திருவள்ளுவர் சாலை, பழைய பை- பாஸ் சாலை, சந்தை பகுதி, பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோயில், பஸ்நிலையம், அண்ணா சாலை மற்றும் காவிரி சாலை வழியாக சென்று காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் நேற்று இரவு ஒவ்வொரு சிலையாக வரிசையாக கரைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.