உள்ளூர் செய்திகள்

 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருந்ததை வேலூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்த போது எடுத்தபடம்.

பரமத்திவேலூரில் ஓட்டல்கள் - வணிக நிறுவனங்களில்100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2023-10-02 07:15 GMT   |   Update On 2023-10-02 07:15 GMT
  • பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.
  • துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித் துள்ளதாக வேலூர் பேரூராட்சிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் மற்றும் தூய்மை பணியாளர்கள் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பாலிதீன் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.4,300 அபராதம் விதித்து பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News