உள்ளூர் செய்திகள்

ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில்சந்தேக நபர்கள் நடமாட்டம்குறித்து தெரிவிக்க வேண்டுகோள்

Published On 2023-07-04 07:20 GMT   |   Update On 2023-07-04 07:20 GMT
  • விவேகானந்தர் மனைவி நித்யா (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்கச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
  • ஜேடர்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தர் மனைவி நித்யா (வயது 28). இவர் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்கச் சென்றபோது, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து அப்பகுதியில் தீ வைப்பு மற்றும் வாழை மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருவாய்த் துறையினர் அப் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

மொத்தம் 14 இடங்களில் சோதனை சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குற்றவாளிகளை கண்டறிய நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளலாம் என பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தெரிவித்துள்ளார்.

ஜேடர்பாளையம் போலீஸ் நிலையம் 9498101050, நாமக்கல் கட்டுப்பாட்டு அறை 9498181216, 04286280007, நாமக்கல் தனிப்பிரிவு அலுவலகம் 9498101020, நாமக்கல் எஸ்.பி., அலுவலகம் 9498181340, பரமத்திவேலூர் டி.எஸ்.பி., அலுவலகம் 8300014434, 9498101023, பரமத்தி இன்ஸ்பெக்டர் 9443522993, ஜேடர் பாளையம் தனிப்பிரிவு போலீசார் 9498123154. மேற் கொண்ட தொலைபேசி எண்ணுக்கு சந்தேகப்படும் நபர்கள் சுற்றி திரிந்தால் பொதுமக்கள் தகவல் தரலாம். மேலும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என போலீசார் அறிவித் துள்ளனர். மேலும் கிராம பகுதிகளில் தொலைபேசி எண்களை நோட்டீஸ் அச்சடித்து விநியோகத்து வருகின்றனர்.

Tags:    

Similar News