நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு நேரடியாக விண்ணப்பிக்க அழைப்பு
- நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தற்போது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நிறைய காலியிடங்கள் இருப்பதால் அந்த பாடப்பிரிவினருக்கு இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அந்த 6 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் இன்று கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை பூர்த்தி செய்து வழங்கலாம்.
இணையதளம் வழியாக விண்ணப்பித்து தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளுக்கும் இடங்களை மேற்கண்ட காலியான பாடப்பிரிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் அந்த பாடப்பிரிவினருக்கு தகுதியானவர்கள் இன ஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் கூறியுள்ளார்.