உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் ஏ.டி.எம்.மில் விட்டு சென்ற ரூ.20 ஆயிரம் ஒப்படைப்பு

Published On 2023-07-08 10:01 GMT   |   Update On 2023-07-08 10:01 GMT
  • பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது.
  • இந்த ஏ.டி.எம்.மிற்கு கடந்த 29-ந் தேதி பணம் எடுக்க வந்த நபர் ஒருவர், பணம் வராததால் சிறிது நேரம் காத்திருந்து விட்டு சென்று விட்டார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது. இந்த ஏ.டி.எம்.மிற்கு கடந்த 29-ந் தேதி பணம் எடுக்க வந்த நபர் ஒருவர், பணம் வராததால் சிறிது நேரம் காத்திருந்து விட்டு சென்று விட்டார்.

ஆனால் அதன் பின்னர் பணம் வந்துள்ளது. இந்த நிலையில், அவருக்கு பின்னால் பரமத்திவேலூர் அருகே குப்பிச்சிப்பாளை யத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் அரசு, அவரது நண்பர் நவீன் (22) ஆகியோர் ஏ.டி.எம்.மிற்கு பணம் எடுக்க சென்றனர்.

அப்போது, அந்த ஏ.டி.எம்-ல் ரூ.20 ஆயிரம் பணம் இருப்பதை பார்த்து, அதை வேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் இந்திராணியிடம் ஒப்படைத்தனர். இதை யடுத்து ஏ.டி.எம்-ல் பணத்தை விட்டுச் சென்ற வர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், வங்கியில் பணத்தை தவற விட்டது பரமத்திவேலூர் பள்ளி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலா ளராக பணிபுரிந்து வரும், அனிச்சம்பாளை யத்தை சேர்ந்த கருப்பண்ணன்(65) என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவர் ஏ.டி.எம்-ல் தவற விட்ட ரூ.20 ஆயிரத்தை வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி கருப்பண்ணனிடம் நேற்று ஒப்படைத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், போலீசாரிடம் பணத்தை ஒப்படைத்த மாணவர் அரசு மற்றும் நவீன் ஆகியோ ருக்கும் இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Tags:    

Similar News