உள்ளூர் செய்திகள்

புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதிய பஸ் நிலைய பணிகள் நகராட்சி மண்டல இயக்குனர் ஆய்வு

Published On 2023-08-09 06:49 GMT   |   Update On 2023-08-09 06:49 GMT
  • புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் 13 ஏக்கரில் ரூ 20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறியதா வது: நாமக்கல் புதிய பஸ் நிலையம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பஸ் நிலைய பணிகள் முடிய காலம் உள்ள நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.

Tags:    

Similar News