உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

Published On 2023-10-09 07:05 GMT   |   Update On 2023-10-09 07:05 GMT
  • நாமக்கல் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
  • அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல்:

நாமக்கல் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் அவ்வப்போது உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்கள், பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் என மொத்தம் 45 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 5 கடைகளில் இருந்து 24 கிலோ சுகாதார மற்ற சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி மற்றும் பிற உணவு வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதுபோல் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும். ஓட்டல்களில் சுகாதாரமற்ற இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News