உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் முகாம்
- அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது.
- அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக குமார பாளையம் அரசு மருத்துவ மனையில் காசநோய் இறப்பில்லா திட்டத்தின் கீழ் எப்-75 ஊட்ட சத்து பானம் வழங்கும் முகாம் நடை பெற்றது. அதி தீவிர சிகிச்சை கீழ் உள்ள காசநோயாளிகள் 6 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.
தன்னார்வலர் பிரபு, மாவட்ட காசநோய் துணை இயக்குனர் வாசுதேவன், குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி, உதவி டாக்டர் ஆர்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார பார்வையாளர் கெளதம், ஆய்வக பொறுப்பாளர் சரண்யா மற்றும் செவிலியர்கள் பலரும் பங்கேற்றனர்.