உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் வருகிற 13-ந் தேதி கம்பர் விருது வழங்கும் விழா

Published On 2023-10-05 10:03 GMT   |   Update On 2023-10-05 10:03 GMT
  • கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது.
  • கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார்.

நாமக்கல்:

நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி நாமக்கல் நளா ஓட்டலில் நடைபெறுகிறது. கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். நிர்வாகிகள் நல்லுசாமி, கோபால், சரவணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி, தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மதுரை பேராசிரியர் சுந்தரத்துக்கு கம்பர் விருதும், பெங்களூரு ராமசாமிக்கு கம்பர் மாமணி விருதும் வழங்கப்படுகிறது.

என்.பி.எஸ்.சுந்தராஜன், டாக்டர். ராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சார்பில் கல்லாதது கம்பன் அளவு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து ராசிபுரம் பரமேஸ்வரனுக்கு நற்றமிழ் நாயகர் விருதும், கந்தசாமிக்கு சமூக ஆர்வலர் விருதும், இயற்கை விவசாயி கண்ணகிக்கு வேளாண் வித்தகர் விருதும், கிருஷ்ணமூர்த்திக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.

வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடுவர் ராஜா தலைமையில் இலங்கை வேந்தன் ராவணனின் வீழ்ச்சிக்கு காரணம் முடிவில்லா ஆனவமா, முறையற்ற காமமா என்ற தலைப்பி ல் பட்டி மன்றம் நடக்கிறது.

அதில் ராஜ பாளையம் ராஜ்கு மார், திருச்சி மாது, மதுரை ரேவதி சுப்புலட்சுமி, சென்னை பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் கம்பன் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News