குமாரபாளையத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு
- 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
- குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
குமாரபாளையம்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
அதன்படி, குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
இதையொட்டி குமாரபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்,நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், எலந்த குட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலு, நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் நகர்நல மைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், இனியா ராஜ், கனகலட்சுமி, கோவிந்தராஜன், விஜயா,திமுக நிர்வாகிகள் செந்தில்குமார், செல்வராஜ், சரவணன்,சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.