மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த குழுக்கள் அமைப்பு
- தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியை, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடும் வகை யில், அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங் களை , முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன், நேரடை யாக ரேசன்கார்டுதாரர்கள் வீட்டிற்கே சென்று, முகாமிற்கு வரவேண்டிய நாள், நேரம் குறித்து விற்பனையாளர் பதிவு செய்து வழங்குவார்கள்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த குடும்பத்தலைவியே, அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகா மில் ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகிய வற்றுடன் சமர்ப்பித்து கைவிரல் ரேகை பதிவுகள் மூலம் பதிவுகள் செய்ய வேண்டும்.அனைத்து முகாம்களி லும் போலீசார் மூலம் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தடுக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகை யில் அனைத்து தாலுகா அலுவல கங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
கலெக்டர் அலுவல கத்தில் 1800 425 1997, நாமக்கல் தாலுக்கா அலுவ லகம்-04286 233701, ராசிபுரம்- 04287-222840, சேந்தமங்கலம்- 04286-271127, கொல்லிமலை- 63792-85667, மோகனூர்-04286-297768, திருச்செங்கோடு- 04288-253811, ப.வேலூர்- 04268-250099, குமாரபாளையம்- 04288-264546 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பப் பதிவு முகாம்கள், 2 கட்டங் களாக நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.