பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது.
- வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆஸ்பத்திரி முன் பகுதியில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் பேரூராட்சி பணியாளர்கள் அக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப் பாளர்கள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருவம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடமும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டனர். அதன் பேரில் இன்று காலி செய்ய வேண்டுமென போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.