பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சேலம் மண்டல திட்ட இயக்குனர் கொல்லாரமேஷ் தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சுதந்திர திரு நாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம் பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சேலம் மண்டல திட்ட இயக்குனர் கொல்லாரமேஷ் தலைமை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை துறை ஆலோசனை குழு தலைவர் முரளி கிருஷ்ணா முன்னிலை வகித்தார்.
சுங்கச்சாவடி திட்ட மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தி னர்களாக நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், நாமக்கல் (வடக்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல் ஆகி யோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
கீரம்பூர் முதல் கோனூர் கந்தம்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு அதிகாரி சிவகாம சுந்தரம் செய்திருந்தார். நிகழ்ச்சியில் சுங்கச்சாவடி ஊழியர்கள், இந்திய தேசிய நெடுஞ்சா லைத்துறையினர் கலந்து கொண்டனர்