- தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது.
- அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் காந்தி மற்றும் சம்பத். இவர்களது விவசாய தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்கள் பயிர் செய்துள்ளார். அங்கிருந்த தென்னை மரத்தில் பெரிய அளவில் மலைத்தேனீக்கள் கூடு இருந்தது. அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் குழந்தைகளை தேனீக்கள் தீண்டி தொல்லை கொடுத்து வந்தது. மேலும் அப்பகுதிகளில் விவசாய பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.பொதுமக்களால் தேன் கூட்டை அகற்ற முடியாததால் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வந்து தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து முழுமையாக அகற்றினார்கள் .இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.