உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

நாமக்கல்லில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-24 09:19 GMT   |   Update On 2023-11-24 09:19 GMT
  • தாசில்தார் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர் அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News