உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான ஆசிரியர் ஜூலியட் பிரேமலதா

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்துபாலத்தில் கார் மோதி நாமக்கல் அரசு பள்ளி ஆசிரியை பலி

Published On 2023-11-14 08:36 GMT   |   Update On 2023-11-14 08:36 GMT
  • ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).
  • காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.

நாமக்கல்:

நாமக்கல் பொன்விழா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).

அரசு பள்ளி ஆசிரியர்

இவர் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தங்கள் மகனைப் பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் நாமக்கல்லில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை ஜூலியட் பிரேமலதா உயிரிழந்தார். அவரது கணவர் ரகுநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆசிரியையின் உடல் நாமக்கல் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News