பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் விதைகள்
- விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுப டியை ஊக்குவிக்க 75 சதவீத மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
- 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவீத மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் 2023-24-ம் ஆண்டு கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கூடச்சேரி, பிராந்தகம், வீரணம்பாளையம் மற்றும் சுங்ககாரன்பட்டி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்கள் சாகுப டியை ஊக்குவிக்க 75 சதவீத மானியத்தில் விதைகள் அல்லது நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் மா, பலா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, சீத்தா போன்ற 5 வகையான செடிகள் அடங்கிய பழச்செடி தொகுப்பு விவசாயிகள் மற்றும் விவசாயி அல்லாத பயனாளிகள் 75 சதவீத மானியத்தில் ரூ.50 செலுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி செய்ய பழச்செ டிகள் மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் தங்களது கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், ரேசன்கார்டு நகல் மற்றும் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பரமத்தி வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்ப முள்ள அனைத்து கிரா மங்களை சேர்ந்த விவசாயி களும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று பரமத்தி தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.