பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம்
- குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல் போன் எண் பதிவு, செல்போன் எண் மாற்றம் மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
முகாமில் தனி வருவாய் ஆய்வாளர் பூபாலன் மற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.