நாமக்கல்லில் சிறப்பு கடன் உதவி முகாம் 120 பேருக்கு ரூ. 16.50 கோடி கடன்
- தொழில் மையம் சார்பில், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது.
- இதனைத் தொடர்ந்து முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தொழில் மையம் சார்பில், மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம், நாமக்கல்லில் நடைபெற்றது.
மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில், மத்திய அரசின் கடனுதவி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை இந்தியன் வங்கியின் திருப்பூர் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் செல்லும் வாகனங்கள் பொதுமக்களிடையே, மத்திய அரசின் கடன் திட்டங்கள், வங்கி சேவைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த உள்ளன.
இதனைத் தொடர்ந்து முகாமில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா பல்வேறு கடன் உதவி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, மத்திய, மாநில அரசு துறைகள் மூலம் பல்வேறு தொழில்களின் மேம்பாட்டுக்காக 120 தொழில் முனைவோருக்கு ரூ. 16.50 கோடி கடனுதவிகளை, நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் கோஸ்டல் இளங்கோ வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி, கனரா வங்கியின் துணை பொது மேலாளர் மோகன், மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ஜான்சிராணி, கடன் ஆலோகர் அசோகன், முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் முருகன் மற்றும் திரளான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.