திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
- திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலின் உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவிலில் 25-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
- இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம், அலங்கார தீபாராதனை, யாக பூஜைகள், கன்னிகா மற்றும் சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலின் உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவிலில் 25-ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி அம்மனுக்கு அபிசேகம், அலங்கார தீபாராதனை, யாக பூஜைகள், கன்னிகா மற்றும் சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் அம்மன் கேதராம்பிகை அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.
மேலும் கொலு மண்டப மேடையில் பல்வேறு திருத்தலங்கள், புராணங்கள், இதிகாசங்கள், புகழ் பெற்ற தலங்கள் குறித்த பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இந்த கொலு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு நாளும் பத்ரகாளியம்மன் மூலவருக்கு அம்பிகை, கங்கணதாரணம்பிகை, குமுதாம்பிகை, மாங்கல்யதாராணம்பிகை உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கலசா பிசேகம், அன்னபாவாடை சாற்றல், சர்ப்ப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவுடன் நவராத்தி விழா பூஜைகள் நிறைவு பெறுகிறது.