நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு இறந்த ஆசிரியரின் உடல் தானம்
- தங்கவேல் (88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
- இறப்பதற்கு முன்பு தனது முழு உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு மருத்துவமாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்கு அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்திரத்தை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கி இருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் தங்கவேல் (88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
அவர் இறப்பதற்கு முன்பு
தனது முழு உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு மருத்துவமாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்கு அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்திரத்தை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கி இருந்தார்.
உடல் ஒப்படைப்பு
அவரது விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் அவரது மனைவி அகி லாண்டேஸ்வரி மற்றும் மகன் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வரும் சித்தார்த்தன் ஆகியோரின் ஒப்புதலுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்கள் பயன் பெறும் வகையில் இறந்த ஆசிரியர் தங்கவேலின் உடல் தானமாக வழங்கப்பட்டது.
இது குறித்து நாமக்கல் மருத்துவக் கல்லூரி சார்பில் ஆசிரியர் சித்தார்த்தனுக்கு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கல்விக்காக தங்களது தந்தையின் உடலை தானமாக வழங்க முன் வந்த உயரிய நோக்கத்திற்கு மருத்துவக்கல்லூரி சார்பில்
நன்றியை தெரிவித்துக் கொள்வ தாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இறந்த பிறகும் தனது உடலை
மருத்துவக்கல்லூரி மாண வர்களின் கல்விக்காக வழங்கிய ஆசிரியர் தங்க வேலின் குடும்பத்திற்கு சமூக ஆர்வலர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.