நாமக்கல் அருகே கஞ்சா விற்க முயன்றசேலம் வாலிபர்கள் 2 பேர் கைது
- நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- காவல் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், வெற்றி விகாஸ் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் நின்று கொண்டி ருந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த பையை சோதனையிட்ட போது பையில் 1.500 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு நிலையத்திற்கு அழைத்து வந்த விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பூபதி (வயது 23), ஸ்ரீராம் (25) ஆகியோர் என்பதும் நாமக்கல் பகுதிக்கு கஞ்சா விற்பனை செய்ய செல்லும் போது இருவரும் பிடிப் பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.