கபிலர்மலை பகுதி பள்ளிகளில் பணிபுரியும்தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- இக்கூட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றியத்த லைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கபிலர்மலை ஒன்றியத்த லைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சந்திரகாந்தா வரவேற்புரை ஆற்றினார். ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக தூய்மைப் பணியா ளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும்.
தமிழ் மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழ்நாடு அரசுப்பணிகளில் 100 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.