உள்ளூர் செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 22 பேர் காயம்

Published On 2023-08-04 07:23 GMT   |   Update On 2023-08-04 07:23 GMT
  • 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள் ளியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் உள்பட 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.

அங்கு அவர்கள் வழி பாடு நடத்திவிட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் அதே சரக்கு வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். சீராப்பள்ளி யைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 50) சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். ராசிபுரம்-நாம கிரிப்பேட்டை சாலையில் சீராப்பள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டி ருந்த போது திடீரென்று ஸ்டேரிங் லாக் ஆகிவிட்ட தாக கூறப்ப டுகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அப்போது கூச்ச லிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து காயம் பட்ட வர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசி புரம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 14 பெண்கள் உட்பட 22 பேர் காயம் அடைந்தனர். இவர்க ளில் 17 பேர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:-

வனிதா (26), ராமாயி (65), பாப்பு (48), சரஸ்வதி (22), கல்பனா (46), அத்தாயி (70), லட்சுமி (58), சின்ன பொன்னு (65), ஜெயம்மாள் (44), ருகமணி(40), இளைய நிலா (13), பரிமளா (45), சிவா(13), தங்கமணி (48), இளங்கோ (45), தஸ்வின் (10), கோல் வேந்தன் (3) இவர்கள் அனைவரும் தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விசாரணை

மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த நந்தகுமார் (17), கவிதா (36), பவுன் (55), சிவகாமி (55), ஆதித்தன் (8) உள்பட 5 பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் பவுன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி னார். டிரைவர் தர்ம லிங்கம் காயம் இன்றி தப்பிய தாக கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்த வர்கள் அனைவரும் சீராப் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து குறித்து நாம கிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News