பெண்ணை 2-வது நாளாக பரிசல் மூலம் தேடும் பணி தீவிரம்
- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
- பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பரிசல் மூலம் தேடுதல்
உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.
இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.