உள்ளூர் செய்திகள்
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
- பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது. பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு பரமத்தி வட்டார வேளாண்மை துறை மூலம் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்ய 50 சதவீதம் மானிய விலையில் சோளம் -கோ-32, நிலக்கடலை -கதிரிலெப்பாக்ஸி-1812, பிஎஸ்ஆர்-2, உளுந்து வம்பன்-8, வம்பன்-9, வம்பன்-10 ஆகிய சான்று விதைகள் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா மற்றும் ஆதார் அட்டை விவரங்களுடன் பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயனடையுமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.