உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம்
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது
- சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும்
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசார் சார்பில் ராகிங்கிற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று பேசுகையில், ஒரு துன்பகரமான இன்பத்தைப் பெறுவதற்கான நோக்கத்துடன் ஒரு மாணவரின் அதிகாரம் அல்லது மேன்மையைக் காட்டுதல்தான் ராகிங். நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அனைத்து மாணவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு, கவுன்சில்களுடன் கலந்தாலோசித்து இந்த ராகிங் ஒழுங்குமுறையை கொண்டு வருகிறது. மேலும் சக கல்லூரி மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டால் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.